கல்கிஸை பகுதியில் உரிய விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்தமைக்காக இரு ந‍ைஜீரியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், உரிய விசா இல்லாமல் நீண்ட காலமாக இலங்கையில் தங்கியிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல நைஜீரியர்கள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.