இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட ஒரு இழுவைப் படகும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்திய மீனவர்கள் 9 பேரும் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக காரைநகருக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.