தென்னாபிரிக்காவுக்கு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -1708 என்ற விமானத்தில் இவர்கள், தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 8.00 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணி தான் எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.