எமக்கு தேவை யுத்தத்தின் நினைவுதூபி அல்ல, அமைதிக்கான நினைவு சின்னமேயாகும் - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர்

Published By: Vishnu

10 Jan, 2021 | 08:21 AM
image

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும் எனத் தெரிவித்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நினைவுத்தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் தெளிவூட்டும் வகையில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் வருட காலப்பகுதியில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் குழுவினால் ஏதோ ஒரு நினைவுத்தூபியொன்று அதற்குள் கட்டியெழுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்தோடு அந்த நினைவுத்தூபியை அடிக்கடி மேம்படுத்தப்பட்டதான விடயத்தையும் அறியக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் உண்மையில் தெரிவிப்பதாயின், அது வடக்கு தெற்குக் கிடையிலான ஐக்கியத்திற்கு தடையாக அமையக் கூடும். 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கான முடிவாகும் அது.

தற்பொழுது பல்கலைக்கழக கட்டமைப்பில் கற்கும் மாணவர்கள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் 9, 10; மற்றும் 11 வயதைக் கொண்டிருந்த எமது மாணவர்கள் ஆவர். தமிழ் , சிங்களம் அல்லது முஸ்லிம் எந்தவொரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு உட்பட்டவராக இருந்த போதிலும் இலங்கையர்களாகிய எமது பிள்ளைகள் இவர்கள். 

இதன் காரணமாக இன்று கூறுவதற்கு மகிழ்ச்சியடைகின்றோம் என்பது என்னவெனில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் சுமார் 1500 பேர் கல்வி கற்கின்றனர். அத்துடன் தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆகக் குறைந்த ரீதியில் 600 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட தமிழ் மாணவர்கள் விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் எமக்குள்ள முக்கியத்துவமான விடயம் தான் எமது மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாகும்..

இதன் காரணமாக எமக்கு முன்பிருந்த அந்த அனுபவங்களை எதிர்காலத்திலும் காண்பதற்கு ஏற்படாது என்பற்கு எமக்கு உள்ள ஒரே ஒரு காரணி தான் இந்த மாணவர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் , சமாதானம் ஆகும். இவர்கள் இருப்பது பொதுவான சாதாரண விடுதிகளில் ஆகும். இவர்கள் கலந்துகொள்வது பொதுவான விரிவுரைகளிலாகும். இவர்களது விளையாட்டு நடவடிக்கைகள் போன்ற அனைத்தும் இடம்பெறுவது பொதுவானதாகவே இடம்பெறுகிறது.

இதுவரையில் எந்தவொரு பிரச்சினையும் இந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறாதிருப்பதற்கு மாணவர்களே பொறுப்பாக இருப்பது தொடர்பில் நாம் நாடு, இனம் என்ற ரீதியில் உண்மையிலேயே அதிஷ்டமான விடயமாகும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் அவர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு இந்த நினைவுத் தூபியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்று (நேற்றுமுன்தினம்) இரவில் இருந்து அகற்றப்படுகிறது. நான் நினைக்கும் வகையில் இது மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும். எமக்கு தேவைப்படுவது என்னவெனில் யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச்சின்னங்களேயாகும். இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22