உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாகவும், இதொரு ஏற்றுக்கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் எனவும் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி நேற்றைய தினம் இரவு இடித்தழிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்கால் நினைவுதூபி இரவோடு இரவாக திருட்டுத்தனமாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமானது இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

அத்தோடு, இலங்கை தீவில் தமிழ் மக்கள் உயிர் இழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.  இது ஏற்றுக்கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.