தமக்கு இது தொடர்பில் மேலிடங்களில் இருந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாலேயே உடைக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தன்னிடம் தெரிவித்ததாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்ததன் பின்னர் மாணவர் ஒன்றிய தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி தொடர்பில் தமக்கு மேலிடங்களில் இருந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாலேயே உடைக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா என்னிடம் தெரிவித்தார்.

அதனை திரும்ப கட்டுவதே, பல்கலைக்கழக பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் வெளியேறுவது தொடர்பில் என்னால் கூறமுடியது என்று தெரிவித்த துணைவேந்தர் பல்கலைக்கழகம் தொடர்பான அதிகாரம் தற்போது எமது கையில் இல்லையென்றும் அது பாதுகாப்பு தரப்பின் கையில் உள்ளதாகவும் கூறினார்.

ஆனால் நாம் எதனை குழப்பாது எமது போராட்டத்தை தொடருவோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்தார்.