நினைவுத் தூபிக்கு ஏன் இவ்வளவு அச்சம்?: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கேள்வி

Published By: J.G.Stephan

09 Jan, 2021 | 12:34 PM
image

(நா.தனுஜா)

ஆயுதங்களையும் படைகளையும் விட மக்களின் இழப்பும் வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம்வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பதன் காரணத்தினாலா யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத்தூபி அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது. 

அதனைக் கண்டித்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினாலும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் கண்டனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், அதில் மேலும் கூறியிருப்பதாவது,

'போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு நினைவுத்தூபியினால் ஏன் அச்சமடைய வேண்டும்? மக்களின் இழப்புக்கள், நினைவுகள், துன்பம் மற்றும் கண்ணீர் என்பன ஏன் மிகுதியான பயத்தை ஏற்படுத்த வேண்டும்? ஆயுதங்களையும் படைகளையும் விட வலியும் வேதனையும் கண்ணீரும் மிகவும் பலம்வாய்ந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பது தான் இதற்கான காரணமா?" என்று அந்தப் பதிவில் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி, தமது அன்பிற்குரியவர்களை மறக்கவேண்டும் என்று மக்களை வலிந்து நிர்பந்திக்கும் பட்சத்தில், அது அன்பிற்குரியவர்களை மேலும் மேலும் நினைவுகூர்வதற்கே வழிவகுக்கும் என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53