யாழ்ப்பாணம் பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர்,

“ இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.”

“ உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக்குறிப்பிட்டப்பட்டுள்ளது.