இலங்கையில் கொரோனா மரணங்கள் மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நேற்றைய தினம் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இலங்கையில் 225 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,305 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் இலங்கையில் 524 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 40,317 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். 671 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 6,763 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட மேலும் 03பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு -14 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரம்புக்கணை மாவட்ட வைத்தியசாலைக்கும் பின்னர் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத்தம் விஷமானமை மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக ஜனவரி 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக ஜனவரி 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஹொரணை பகுதியைச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர்,கொரோனா தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நோய் மற்றும் மாரடைப்பு காரணமாக ஜனவரி 06 ஆம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.