மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 சுகாதார பிரிவுகளில் 218 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டுமாவடியில் 15 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் 5 பேரும், வாழைச்சேனையில் 20 பேரும், காத்தான்குடியில் 2 பேரும், கிரானில் 3 பேருமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 218 பேருக்கு டெங்கு நோய்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த டெங்கு நோய்த் தாக்கத்துக்கு அதிகமாக பெண்களும் சிறுவர்களும் பாதிகப்பட்டுள்ளனர். இவர்கள் அதிகளிவு வீட்டை விட்டு வெளியேறாதவர்கள். ஆகவே டெங்கு நுளம்பு வீடுகளில் தான் அதிகமாக காணப்படுகின்றது.

டெங்கு என்பது பல வருடங்களாக அனைவரும் அறிந்த விடயம் இதில் 5 பிரதேசத்தில் பல காலாங்களாக டெங்கு இரந்து கொண்டிருக்கின்றது எனவே மக்களுடைய மனப்பாங்கு மாறாமல் இதனை அழிக்கமுடியாது. 

வீடுகளில் சுகாதார துறையினர் சென்று அனைத்தையும் அகற்றவேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.

எங்களுடைய பணி அதற்குரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கமுடியும் அதற்கு அப்பால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தங்களது வீட்டினையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அதேவேளை மட்டக்களப்பு சுகாதாரபிரிவில் உள்ள சின்ஊறணிபகுதியில் சிறுமி ஒருவர் டெங்கு நோய்தாக்கத்துக்கு உள்ளானதையடுத்து சின்னஊறணி, கொக்குவில், பிரதேசங்களில் இன்று சுகாதார பிரிவினர் புகைவீசும் மற்றும் கிருமிநாசணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.