(இராஜதுரை ஹஷான்)
மேல்மாகாணம் உள்ளிட்ட ஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த பிரதேசங்களில் உள்ள அறநெறி பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக செயற்படுத்தும் பொறுப்பு குறித்த அறநெறி பாடசாலையின் நிர்வாக பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது என புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
கொவிட்-19 வைரஸ் தாக்கததின் காரணமாக அறநெறி பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டன. உரிய காலத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்ட மத விவகாரம் தொடர்பான பரீட்சைகள் அனைத்தும் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டன.
அறநெறி பாடசாலைகளை திறப்பது குறித்து பலதரப்பட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்த்த ஏனைய பகுதிகளில் உள்ள இந்து, முஸ்லிம், பௌத்த மற்றும் கத்தோலிக்க மதங்களின் அறநெறி பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் வழியுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் செயற்படுத்தும பொறுப்பு குறித்து அறநெறி பாடசாலை நிர்வாக பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேச சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள். பிற்போடப்பட்டுள்ள மத விவகார பரீட்சைகளை விரைவாக நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேல்மாகணத்திலும் ஏனைய தனிமைப்படுத்தல் பகுதிகளிலும் பாதுகாப்பான முறையில் பரீட்சைகளை நடத்த சுகாதார தரப்பினரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM