மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளைக் கடலில் நேற்று வியாழக்கிழமை (07) நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கணாமல் போயுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுதாவளை மத்தி பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் பிதுர்னன் என்பவர்  சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை மதியம்  உணவருந்திவிட்டு தமது வீட்டிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றவர்.

இரவாகியும் வீடு தீரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடியும் அவரைக் காணவில்லை.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை(08) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுட நிலையில் குறித்த இளைஞனுடன் பல இளைஞர்கள் ஒன்றினைந்து களுதாவளைக் கடலில் வியாழக்கிழமை மாலையில் நீராடியுள்ளதாகவும் இதன்போது நண்பன் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருந்தபோதும் இது தொடர்பாக பொலிசார் பல திசைகளில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.