அமெரிக்க கேபிடல் ஹில் வளாகத்தில் புதன்கிழமை டெனால்ட் டரம்பின் ஆதரவாளர்கள் முன்னெடுத்த வன்முறைகளின்போது காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் வியாழக்கிழமை தாமதமாக அறிவித்துள்ளனர்.

பிரையன் சிக்னிக் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கேபிடல் ஹில்லில் நடந்த கலவரங்களின்போது எதிர்பார்ளர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டபோதே சிக்னிக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்‍சை பலனின்றி அவர் வியாழன் இரவு உயிரழந்துள்ளார்.

இந் நிலையில் சிக்னிக் கின் மரணம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க கேபிடல் பொலிஸார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.