(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின், அரச உளவுச் சேவையில் கடமையாற்றுவதற்கான பயிற்சி நிலை  பொலிஸ் காண்ஸ்டபிள்கள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பதவிக்கு  நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான எழுத்து மூல பரீட்சை இம்மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இந்த பரீட்சைகள் 6 பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் என  பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

கொழும்பு 1 ஹமீத் அல் ஹுசைனி மகா வித்தியாலயம்,  கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயம்,  கண்டி புஷ்பதான மகளிர் வித்தியாலயம்,  அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்ர மகா வித்தியாலயம்,  காலி விதியாலோக்க வித்தியாலயம், அம்பாறை டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயம் ஆகிய பரீட்சை நிலையங்களிலேயே இப்ப ரீட்சை இடம்பெறவுள்ளது.

 இப்பரீட்சைக்கு தோற்ற தகுதிபெற்றுள்ள அனைவருக்கும் பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் தலைமையகம், பரீட்சைக்கு முன்னர் அவ்வனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெறாத தகுதிபெற்ற பரீட்சாத்திகள் 011- 2334601 , 011- 2430362 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்து அப்பத்திரத்தை தொலை நகலில் பெற்றுக்கொள்ல முடியும் என அறிவித்துள்ளது.