ஜனவரி 05 ஆம் திகதி முதல் இன்று வரை முகக் கவசம் அணியத் தவறியவர்கள் மீது நடத்தப்பட்ட 1,022 விரைவான அன்டிஜன் பரிசோதனையில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதே காலப்பகுதியில் மேலும் 938 நபர்களும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இதேவேளை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தகவறிய குற்றச்சாடடுக்காக நேற்றைய தினம் மாத்திரம் 357 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 220 பேர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், 157 பேர் பி.சி.ஆர். சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.