முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அப்புறப்படுத்தப்பட்ட 1.5 பில்லியன் முகக்கவசங்கள் கடலுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரசபையின் பொது மேலாளர் டாக்டர் டெர்னி பிரதீப் குமாரா தெரிவித்தார்.

இலங்கையில் முகக்கவசங்கள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால் ஆகியவற்றிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இலங்கையர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவும், நாடு மற்றும் சுற்றுச்சூழலையும் கடற்கரையையும் பாதுகாக்க உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.