பி.சி.ஆர். பரிசோதனை செய்தவர்கள் மாத்திரமே வவுனியாவில் பாடசாலைகளுக்குள் அனுமதி - சுகாதார வைத்திய அதிகாரி

Published By: Digital Desk 4

07 Jan, 2021 | 08:11 PM
image

வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும் நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் . பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் , அதிபர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.

குறித்த கல்வி வயலத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பாடசாலைகளுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் ஏனையவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி . திலீபன் தெரிவித்துள்ளார் . 

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இன்று காலை 8 மணிமுதல் வவுனியா வடக்கு கல்வி வயலத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பி.சி.ஆர்  பரிசோதனைகள் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்றையதினம் இப்பரிசோதனை வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களுக்காகவே மேற்கொள்பட்டிருந்தது. 

வெளிமாவட்டங்களிலிருந்து 150 ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக வருகின்ற போதிலும் இன்று பரிசோதனைக்காக 34 ஆசிரியர்களே வருகை தந்திருந்தார்கள். எனவே நாளையதினமும் குறித்த பரிசோதனை இடம்பெறவுள்ளதனால் இன்றையதினம் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தராதவர்களும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்களும் நாளையதினம் தவறாது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . 

எனினும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை  அறிக்கையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே குறித்த பாடசாலைகளுக்குள் சென்று  கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்திற்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு

2026-07-15 10:20:57
news-image

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப்...

2026-07-15 10:23:04
news-image

யாழ். காக்கை தீவு மீள் சுழற்சி...

2026-07-15 10:16:12
news-image

இலங்கை அரசியல்வாதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்...

2026-07-15 10:20:16
news-image

யாழ். காரைநகரில் வெளிநாட்டவர்களின் நகைகள், பணங்களை...

2026-07-15 09:52:17
news-image

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக...

2026-07-15 09:44:34
news-image

வெவ்வேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு...

2026-07-15 09:04:38
news-image

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத்...

2026-07-15 09:01:45
news-image

காளான் பயிர்ச்செய்கையாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம்...

2026-07-15 08:55:48
news-image

இன்றைய வானிலை 

2026-07-15 06:53:39
news-image

யாழ். கல்வி அபிவிருத்தி உப குழுக்...

2026-07-15 06:52:10
news-image

சலே தாக்கல் செய்த ரிட் மனு:...

2026-07-15 06:47:42