•அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட தடுப்பு ஊசி, சில மருத்துவப் பரிசோதனையின் பின்னர் பாவிக்கத் தொடங்கியுள்ளனர். 

•சாதாரண மக்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்படும் தடுப்பு ஊசி கொவிட்-19 ஊசி மருந்து 

இலங்கையை பொறுத்தவரை, பக்கவிளைவுகள் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்க, உடலின் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டியது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

•இன்னுமொரு முக்கியமான காரணி இந்த தடுப்பு ஊசி உடலில் எவ்வளவு காலத்திற்கு முறையான எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல எவ்வளவு காலத்திற்கு எதிர்ப்பு சக்தி உடலில் நீடிக்கும் என்பதாகும். ஆனால் சந்தைக்கு வந்துள்ள தடுப்பு ஊசி மருந்து இரண்டு முறை ஏற்றப்பட்டால், ஒருவருக்கு தேவையான எதிர்ப்புச் சக்தியையும், பாதுகாப்பையும் ஒரு வருடத்திற்கு கொடுக்கும் என்று அறியப்பட்டுள்ளது. 

•இந்த தடுப்பு ஊசி மருந்திலிருந்து முறையான பாதுகாப்பையும் செயல்திறனையும் பெறவேண்டுமாயின் இது உற்பத்தி செய்யப்பட்ட தினத்திலிருந்து தடுப்பு ஊசி ஒருவருக்கு உடலில் ஏற்றப்பட்ட தினம் வரை அறிவுறுத்தப்பட்ட வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டிய தேவை உண்டு. இதுவே தடுப்பு ஊசியின் “செயல்திறன்” எனச் சொல்லப்படும். இந்த குறிப்பிட்ட 

செயல்திறனை அடைய வேண்டுமாயின் தடுப்பு ஊசி அறிவுறுத்தப்பட்ட வெப்பநிலையில் பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

•இலங்கையில், இந்த தடுப்பு ஊசியை அறிமுகப்படுத்தும் பொழுது, முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இந்த தடுப்பு ஊசி ஒரு மனிதனுக்கு பாதுகாப்பானதா? தேசிய மருத்துவ ஒழுங்குமுறை அதிகார சபை இந்த தடுப்பு ஊசியை பதிவு செய்வதற்கு முதல் எல்லாவிதமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் கையாளும். இதில் குறிப்பாக தொற்று நோயியல் பிரிவு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பு ஊசி தர அலகு, அடங்கிய சுயாதீன நிபுணர் குழு, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட எல்லா ஆவணங்களையும், அதன் உள்ளடக்கங்களான  தடுப்பு ஊசி பற்றிய தகவல்கள், பக்கவிளைவுகள் என்பனவற்றை கவனத்தில் கொண்டு, நாட்டில் இந்த தடுப்பு ஊசிகள் பதிவு செய்வதற்கு முன்னர் உகந்ததா? என்று பரிசீலிக்கும். 

•வெவ்வேறு விதமான கொவிட்-19 தடுப்பு ஊசி மருந்துகளை, அவை பேணப்படவேண்டிய வெப்பநிலையில் வைத்திருக்கப்பட வேண்டியது, அதன் செயல்திறனை பேணுவதற்கு அவசியமானது.

•எமது நாட்டில் எல்லா தேசிய நோய்த் தடுப்புத் திட்ட தடுப்பு ஊசி மருந்துகள் 20-80 யில், இதற்கென குளிரூட்டப்பட்டு தயாரிக்கப்பட்ட அறைகளில், தடுப்பு ஊசிகளை முறையாகப் பாதுகாப்பாக குளிர் அறைகளில் பராமரிக்கிறது. இந்த வசதி நாடு பூராகவும் கிடைக்கப் பெறுகிறது. 

•தடுப்பு ஊசி மருந்து வைக்கப்படும் குளிர் அறை வசதிகள், தொற்று நோயியல் பிரிவிலும், பனிவரிசையான குனிரூட்டிகள் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும், சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்திலும், மற்றும் வைத்தியசாலை தடுப்பு ஊசி கிளினிக்குகளிலும் கிடைக்கப்பெறுகின்றன. 

•தற்போது அடையாளப்படுத்தப்பட்டு பாவிப்பில் உள்ள தடுப்பு ஊசி மருந்தானது, முறையான எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி பாதுகாக்க இரண்டு தடவைகள் கொடுக்கப்பட வேண்டும்.

•தடுப்பூசியின் செயல்திறனை பராமரிப்பதற்கு குளிர்ச்சங்கிலி சேமிப்பு வசதிகள், தேவையான பாதுகாப்பான எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கான மருந்து கொடுக்கப்படும் தடவைகள், தடுப்பூசியின் பாதுகாப்பு சம்பந்தமான கரிசனைகள், தடுப்பு ஊசி பெறுபவர்களின் ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்றவையே இலங்கை தடுப்பூசி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

•புதிய தடுப்பூசியைப் பொறுத்தவரையில், தடுப்பு ஊசி முன்முயற்சிக்கான உலகளாவிய கூட்டணி இந்த நிறுவனமானது குறைந்த, மத்திய வருமானமுள்ள நாடுகளில் புதுமையான அணுகுமுறை மூலமாகவும், உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெவ். ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் நிதிப்பங்காளருடன் சேர்ந்து குறைந்த, மத்திய வருமானமுள்ள நாடுகளுக்கு இந்த தடுப்பு ஊசியை தாமதமின்றி பெறுவதற்கும் முயற்சி எடுக்கின்றது. 

•இந்த வசதி மூலமாக 20வீத சனத்தொகைக்கு தடுப்பு ஊசியை பெறுவதற்கான வாய்ப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நாடுகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிரகாரமாக இலங்கைக்காவும் அதற்கான விண்ணப்பத்தை நேரத்துடன், டிசம்பர் 2020ல் வேண்டிய தடுப்பு ஊசி பங்குகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

•இந்த விண்ணப்பப் படிவம் முதன்மையாக கொடுக்கப்பட வேண்டிய குழுக்களையும் அடையாளப்படுத்தியுள்ளது. முதலாவதாக தடுப்பு ஊசி பெறுவதற்கு அடையாளம் காணப்பட்ட குழுக்களானவை: வயோதிபர், உடன்நோயுள்ளவர்கள், கோவிட் 19 கட்டுப்பாடு, தடுப்பு, பொருளாதார, சுமூக சம்பந்தமான தொழிலாளர்கள் ஆவர்.

•எனினும் இலங்கையில் அமைச்சர்களின் அமைச்சரவையினால் 2015 ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய நோய்த் தடுப்புக் கொள்கையின்படி, புதிய தடுப்பு ஊசியை அறிமுகப்படுத்த முன்னர், என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

•தடுப்பு ஊசிகள், தடுப்பு ஊசியேற்றல் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும் தொழில்நுட்ப நிபுணர் குழு உள்ளது.  தொற்று வியாதி சார்பான தேசிய ஆலோசனைக்குழு என்றழைக்கப்படும் இந்த தொழில்நுட்ப நிபுணர் குழுவே தடுப்பு ஊசிகள், தடுப்பு ஊசியேற்றல் தொடர்பாக பரிந்துரைக்கின்றது. இந்த நிபுணர் குழு ஒன்று கூடி சாட்சியங்களை மீளாய்வு செய்து, அந்த அடிப்படையில் புதிய தடுப்பு ஊசிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். 

•தொற்று நோய்ப்பிரிவு, சுகாதார அமைச்சு சார்பாக நாட்டின் தேசிய நோய்த் தடுப்புக் கொள்கையினூடாக பிரதான தடுப்பு ஊசி நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல், மதிப்பீடு முகவராக செயற்படுகின்றது. 

•இந்த நாட்டில் ஒரு பலமிக்க தொழில்சார் மருத்துவ அமைப்பு மருத்துவர்களுக்கு உண்டு. அது இலங்கை வைத்திய சங்கம் என்று அழைக்கப்படும். இது எல்லா மருத்துவர்களையும், மருத்துவ நிபுணர்களையும் உள்ளடக்கியதொன்றாகும். இந்தச் சங்கம், தொற்று நோய்கள் சம்பந்தமாக அவற்றின் கட்டுப்பாடு, தடுப்பு, தடுப்பு மருந்துகள் உட்பட ஏற்படும் முக்கிய சிக்கல்களை அடையாளப்படுத்தி சுகாதார அமைச்சுக்கு தேவையான உத்திகளை பரிந்துரைக்கிறது. 

இந்த தீவிர நோய் பரவல் காலத்திலும் இந்தச் சங்கம் தடுப்பு ஊசி ஏற்றுவதற்கு முன்னுரிமைக் குழுக்களை அடையாளப்படுத்துவதில் முன் வந்துள்ளது. சுகாதார அமைச்சு தெரிவு செய்த குழுக்களும் சிறீலங்கா வைத்திய சங்கத்தினால் தெரிவு செய்த குழுக்களும் ஒரே மாதிரியானவையே. அவையாவன, வயோதிபர்கள், உடன்நோயாளர்கள், முன்னிலை சுகாதார உத்தியோகத்தர்கள், மற்றும் கொவிட் 19 கட்டுப்பாடு, தடுப்பு சம்பந்தமாக ஈடுபடும் தொழிலாளர்கள், நுழைவுதுறையின் முக்கிய உத்தியோகஸ்தர்கள், அத்துடன் உயர்கூட்டங்களில் பங்குபற்றும் முக்கிய பிரிவினர்கள் ஆவர்.  

இலங்கை  தற்போது செயல்திறன் மிக்க, பாதுகாப்பான கொவிட்19 தடுப்பு ஊசி சம்பந்தமாக வரிசைப்படுத்த தயார் நிலையிலுள்ளது. இது தேசிய தொற்று நோய் சார்பான ஆலோசனைக்குழுவின் ஒழுங்குமுறைப்படி ஏற்றதாக காணப்படுகிறது.

இன்று இலங்கை  மருத்துவ சங்கத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொவிட் -19 தடுப்பூசி  தொடர்பாக இன்று இலங்கை  மருத்துவசங்கம் வெளியிட்ட  அறிக்கையின் சாராம்சம்.

வைத்தியர் .ஆர் .ஹனிப்பா 

தலைவர், 

இலங்கை  மருத்துவ சங்க ஊடக குழு