(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)

12 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் செனற் மீனவர்கள் இறால், மீன்விலை வீழச்சியால் பெரும் இழப்பை சந்திப்பதாக இந்திய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைதுசெய்துள்ள படகுகளை விடுதலை செய்ய வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் ராமேஸ்வர் மீனவர்கள தொடர் வேலைநிறுத்ப்போராட்டத்தில் ஈடுபட்டவந்தனர்.

இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்தார். 

இதனையடுத்து  12 நாட்களுக்குப் பின்  நேற்று  மீன்பிடி தொழலாளர்களின் பற்றாக்குறையால் 400 க்கும் உட்பட்ட படகுகளில் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். காற்றின் வேகத்தால் போதிய மினவரத்து இன்றி கரை திரும்பினர்.

கரை திரும்பிய மீனவர்கள்  தாங்கள் பிடித்துவந்த ஏற்றுமதியாகும் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றுக்கு போதிய விலை கிடைக்காமல் பெரும் இழப்பை சந்திப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படகு ஒன்றிற்கு சராசரி ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல நாளுக்குநாள் விலை வீழ்சியடைந்தால் தங்களால் படகுகளை இயக்க முடியாமல் மீன்பிடி தொழில் முடக்கம் ஏற்படும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.