இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய கொவிட்-19 வழிகாட்டுதல்களின் பட்டியலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.