புதன்கிழமை கொலம்பியா மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை வொஷிங்டன் மேயர் முரியல் பவுசர் அடுத்த 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபத் தேர்தல் முடிவுகளை முறியடிக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க சட்டமன்றக் கட்டிடத்தை புதன்கிழமை பிற்பகல் முற்றுகையிட்ட பின்னர் வொஷிங்டன் மேயர் புதன்கிழமை மாலை 6.00 மணிமுதல் வியாழன் காலை 6.00 மணிவரையான 12 நேரப் காலப் பகுதிக்கு கொலம்பிய மாவட்டத்திற்கான ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

இந் நிலையில் அந்த உத்தரவானது அடுத்த 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 21 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும்.

இதேவேளை ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அது தவிர ஆயுதங்கள் வைத்திருத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஆர்ப்பாட்டம் தொடர்பில் 15 க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.