ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புதன்கிழமை வொஷிங்டனில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடத்தை தாக்கி, தனது தேர்தல் தோல்வியை தகர்த்தெறிந்ததுடன், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு அமர்வை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு காங்கிரஸை கட்டாயப்படுத்தினர்.

ட்ரம்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கட்டிடத்தை சுற்றி வளைத்த பின்னர், அமெரிக்க சட்டமன்றத்தன் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கான உள்ளூர் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஒரு சிறிய குழு கட்டிடத்திற்குள் நுழைந்து பொலிஸாருடன் வன்முறையில் ஈடுபட்டதாக  பென்டகன் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் அடிக்கடி மோதல்களை முன்னெடுத்துள்ளதுடன், வன்முறைச் சம்பவங்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையினரை மீறி சட்ட மன்றக் கட்டிடத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் முயற்சித்தமையினால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.