யாழ்ப்பாணத்தில் இன்று மாலை வீசிய சுழல் காற்றின் தாக்கத்தினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, கல்லுண்டாய் ஜே/136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்கத்தில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.