இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போஷிக்கும் மத்தரசாக்ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அத்துரலிய ரத்தன தேரர் 

Published By: Digital Desk 4

06 Jan, 2021 | 08:56 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்தரசா பாடசாலைகளிலே போஷிக்கப்படுகின்றது. அதனால் மத்தரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான எந்த வேலைத்திட்டங்களையும் இதுவரையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது என எமது மக்கள் சக்தி உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலில் இந்த அரசாங்கத்துக்கு 67இலட்சம் மக்கள் வாக்களித்தது, மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகும். குறிப்பாக ஒருநாடு ஒரு சட்டம் என்ற பிரசாரத்தை நாங்கள் முன்னெடுத்து சென்றோம்.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கான கலந்துரையாடல்கள் கூட ஆளும்தரப்பு கூட்டங்களில் இடம்பெறுவதில்லை.  இதுதொடர்பில் அரசாங்க தரப்பினர் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

விசேடமாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுக்கப்படவேண்டும். தேசிய உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்.

விவசாய நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் உரம் தயாரிக்கப்படவேண்டும். எமக்கு இருக்கும் வளங்களை பயன்படுத்திக் கொண்டு தேவையான உரம் தயாரிக்கலாம். அரசாங்கத்துக்கு அதனை செய்ய முடியாவிட்டால் அந்த பொறுப்பை எமக்கு வழங்கினால் நாங்கள் செய்வோம். 

அத்துடன் ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நிலைநாட்டுவதாக தெரிவித்தாலும் இன்னும் அது ஏற்படுத்தப்படவில்லை. மத்தரசா பாடசாலைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாேஷிப்பது மத்ரசா பாடசாலைகளாகும். கல்வி அமைக்கு அப்பாற்பற்று செயற்படும் இந்த மத்தரசா பாடசாலைகள் சட்டவிராேதாகும். அதனால் மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும். ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் அறநெறி பாடசாலைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

அதேபோன்று இஸ்லாம் மாக்கத்தைவிட்டு மதம் மாறியவர்களை கொலை செய்யவேண்டும் என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் 10ஆம் ஆண்டும் இஸ்லாம் அச்சுப்புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருப்பதே பாரியவிடயமாகும். அந்தளவுக்கு நாங்கள் குருடர்களாகவே இருந்திருக்கின்றோம். பங்களாதேஷ் நாட்டிலும்பார்க்க எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை மற்றும் உணவு பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர்...

2026-09-15 14:49:53