(செ.தேன்மொழி)

காலி - யக்கலமுல்ல பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யக்கலமுல்ல பிரேதேச சபை உறுப்பினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாக்கியதெனிய , பட்டகெட்டிய பகுதியில் நேற்று பெண்ணொருவதை துஷ்பிரயோகம் செய்ததாக யக்கலமுல்ல பிரதேசபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கணவன் உயிரிழந்த நிலையில் , தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த 27 வயதுடைய பெண்ணொருவரையே சந்தேக நபர் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதுடன் , பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரின் உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரை இன்று புதன்கிழமை பொலிஸார் காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யக்கலமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.