சீ.பி.எல் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று வார்ன் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணியை எதிர்கொண்ட அமேசன் வொரியர்ஸ் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகதிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

டலவாஸ்  அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 30  ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அமேசன் வொரியர்ஸ் அணி சார்பில் எம்ரிட் 3 விக்கட்டுகளையும், தன்வீர்  2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

147 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அமேசன் வொரியர்ஸ் அணி  கிரிஸ் லின்னின் சிறந்த துடுப்பாட்டத்தினால் 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கிரிஸ் லின் அசைச்சதத்தை தவறவிட்ட நிலையில் 49 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் வில்லியம்ஸ் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக தன்வீர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை நாளை  இடம்பெறும் லூசிய ஸவுக்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் வெற்றிபெரும் அணி டலவாஸ் அணியுடன் அரையிறுதிப் போட்டியில் விளைாடும் வாய்ப்பை பெறும்