கூட்டமைப்பின் சார்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு சபையில் நன்றி தெரிவித்த சுமந்திரன்..!

Published By: J.G.Stephan

06 Jan, 2021 | 04:09 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன  ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் எனவும், அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என  தாம் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்வைத்துள்ள கருத்துகளுக்காக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் சற்று நேரத்திற்கு முன்னர் முன்வைத்துள்ள கருத்தொன்றை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தமது ஒத்துழைப்புகள் நீண்டகாலமாக காணப்பட்டு வருவதாகவும், அதேபோல் இலங்கையின் அரசியல் தளத்தில் இன ரீதியிலான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதில் அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும்  இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என  தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

அதேபோல் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17