பாகிஸ்தான் கிரிக் கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான யூனிஸ்கான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அணியிலிருந்து நீக்கப்பட்ட யூனிஸ்கான் சுமார் 6 மாதகாலத்திற்குப் பிறகு இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் போட்டி தொடரில் சேர்க்கப்பட்டார்.


இதனால், தேர்வுக் குழுவினர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக, இங்கிலாந்து தொடரின் மத் தியில் அல்லது நான்கு போட்டிகள் கொண்ட தொடர் முடிந்த பிறகு யூனிஸ்கான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தகவல் வெளியானது.


இந்நிலையில், இங் கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக யூனிஸ்கான் அறிவித்தார்.

எப்போது ஓய்வு பெறுவது என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 2000ஆ-ம் ஆண்டு இலங்கைக்கு எதி ரான போட்டியில் அறிமுகமானார் யூனிஸ்கான். 37 வயதான யூனிஸ்கான் இதுவரை 265 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 7 சதம், 48 அரை சதங்களுடன் 7240 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.