வீட்டுக் கழிவுகளை தேயிலை மலையில் கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

06 Jan, 2021 | 04:35 PM
image

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வகந்த தோட்ட தேயிலை மலையில் குப்பை  கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று (06.01.2021) காலை  ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சிறிபுர பிரதேசத்திற்கு திரும்பும் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்த குறித்த தேயிலை மலைக்கு பொகவந்தலாவை சிறிபுர பகுதியில் வசிக்கும் மக்கள் நாள் தோறும் தங்கள் வீடுகளில் சேரும் கழிவு பொருட்களை தேயிலை மலைகளில் வீசி விட்டு சென்று விடுவதாகவும் இந்த கழிவு பொருட்களில் கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுவதாகவும் சில இடங்களில் மாணிக்கக்கல் அகழப்பட்ட பாரிய குழிகள் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிலினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்ற போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட  இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சுற்றாடல் தொடர்பாக கடமை புரியும் அதிகாரிகள் வருகைதந்திருந்தனர். அதன் போது ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் தலைவருக்குமிடையில் காரசாரமான வாக்கு வாதங்கள் இடம்பெற்றன.

தொழிலாளர்கள் தேயிலை மலையில் குப்பை போடுவதனை நிறுத்து வேண்டும் என்று பொலிஸாரிடமும் தலைவரிடமும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் போது குப்பை போடுவதை கண்டால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள் அல்லது உரியவர்களை இனங்கண்டு சொல்லுங்கள் என்று பதிலளிக்கப்பட்டதனால் அங்கு அமைதியின்மை நிலவின.

அதனை தொடர்ந்து சிறிபுர பகுதியில் குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கமாரா பொருத்தப்பட்டு கவனிப்பதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04