2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷி தொடரின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி கனடாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கனடாவின் எட்மண்டனில் அந் நாட்டு நேரப்படி செவ்வாயன்று இரவு நடந்த இந்த இறுதிப் போட்டியில் 2-0 (1-0, 1-0, 0-0)  என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

டர்கோட் அலெக்ஸ் (13 ஆவது நிமிடம்), ஜெக்ராஸ் ட்ரெவர் (20 ஆவது நிமிடம்) ஆகியோர் அமெரிக்க அணி சார்பில் தலா ஒவ்வொரு கோல்களை அடித்தனர்.

ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் அமெரிக்கா தங்கப் பதக்கம் வெல்வது இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.

2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற கனடா வெள்ளிப் பதக்கத்தையும், ரஸ்ய அணியை வீழ்த்தி பின்லாந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.