அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ்தாவரங்களின் கண்காட்சி நாளை கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

கொழும்பு விஜேவர்தன மாவத்தை (மக்கலம்) வீதியிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்திலேயே இக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 

நாளை 5 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இக் கண்காட்சி தொடர்ந்து 6 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். 

நாளைய நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ராஜாங்க அமைச்சர் திலிப்வெத ஆராச்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார்.