2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து அணி ரஷ்ய அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

கனடாவின் எட்மண்டனில் செவ்வாயன்று நடந்த இந்த அரையிறுத் ஆட்டத்தில் 4-1 (0-1, 1-0, 3-0) என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது பின்லாந்து.

அன்டன் லுண்டெல் (25 மற்றும் 58 ஆவது நிமிடம்), மைக்கோ பெட்மேன் (41 ஆவது நிமிடம்), ஜூசோ பார்சினென் (59 ஆவது நிமிடம்) ஆகியோர் ஆகியோர் பின்லாந்து அணி சார்பில் கோல்களை அடித்தனர்.

ரஷ்ய அணி சார்பில் இலியா சஃபோனோவ் போட்டியின் ஆறாவது நிமிடத்தில் கோல் அடித்தார்

பின்லாந்து அணியின் வெற்றியை ஹாக்கி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பின்லாந்து அணியைப் பொறுத்தவரை, இது கடந்த பல ஆண்டுகளில் பெறும் நான்காவது பதக்கமாகும், இதற்கு முன் மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளனர்.

திங்களன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா அணியால் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. 

மேலும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பின்லாந்து அணி அமெரிக்க அணியால் தோற்கடிக்கப்பட்டது.

இந் நிலையிலேயே மூன்றாம் இடத்துக்கான போட்டி பின்லாந்து மற்றும் ரஷ்யா அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இதேவேளை தொடரின் தங்கப் பதக்கத்திற்கான போட்டியின் இறுதிப் போட்டியானது கனடா மற்றும் அமெரிக்க அணிகளுக்கிடையில் தற்போது நடைபெற்று வருகிறது.