உயிரியல் ஆயுத தாக்குதல்களைத் தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் புத்திகா பதிரானா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் ஒரு உயிரியல் ஆயுதம் என்று விவாதிக்கப்பட்டது. இதுபோன்ற உயிரியல் ஆயுதத் தாக்குதல்களைத் தடுக்க நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை.

உலகில் ஒருமித்த கருத்தினால் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், அவை இன்னும் பல்வேறு அரசியல் மற்றும் வர்த்தக தந்திரங்களுக்கு இரகசியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை உள்ளிட்ட வளர்ச்சியடையாத நாடுகள் இந்த உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்வதை இலக்காகக் கொள்ள வாய்ப்புள்ளது என்றும் பாராளுமன்றத்தில் எம்.பி. புத்திகா பதிரானா சுட்டிக்காட்டினார். 

சர்வதேச மாநாடுகளுக்கு ஏற்ப இலங்கையில் உயிரியல் ஆயுத தாக்குதல்களைத் தடுக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று இதன்போது அமைச்சர் சாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.