கிழக்கில், 24 மணித்தியாலத்தில் 38 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்: அழகையா லதாகரன்

Published By: J.G.Stephan

05 Jan, 2021 | 06:12 PM
image

கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 38 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தொடர்ந்தும் பெறப்பட்ட பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மூலமாக மொத்தமாக இது வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் 1,323 நபர்கள் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். 

கிழக்கு மாகாணத்தில் உள்ள 1,323 கொவிட் தொற்றாளர்களில் இருந்து 539 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன்  802 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக கொவிட் தொற்றால் 07 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிராந்திய ரீதியான  பதிவுகளின் படி திருகோணமலையில் 173, மட்டக்களப்பில் 264, அம்பாறையில் 34, கல்முனை பிராந்தியத்தில் 852 என மொத்தமாக 1,323 கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்கள்.

 குறிப்பாக கொவிட் தொற்று அதிகளவான பரவல் இடமாக கல்முனை நகர், மட்டக்களப்பு, காத்தான்குடி, திருகோணமலையில் நகர் பகுதியில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளான ஜின்னா நகர், முருகாபுரி, அபயபுர என்ற அடிப்படையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பு பூரணமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் தனிமைப்படுத்தல் தொடரலாம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30