கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையின் போது சிறுவர் ஒருவரை ஈடுபடுத்திமை தொடர்பான விசாரணையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

சிறுவர் ஒருவரை அரசியல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்துவதாக பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவகம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் நடாசா பாலேந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவகத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்