இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர், சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரிலேயே வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்தோடு, இரு தரப்பு கூட்டு முயற்சி திட்டங்கள், கிழக்கு முனைய விவகாரம் உட்பட மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உத்தியோகபூர்வ விஜயம் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகரின் முதல் வருகையை குறிக்கும் அதே வேளையில், இது புத்தாண்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஜெய்சங்கருக்கான முதல் வெளிநாட்டு பயணமென்பதும் குறிப்பிடதக்கது.