Huawei இன் வலுவூட்டலுடன் இலங்கை Super Sevens ரக்பி சுற்றுப்போட்டி

Published By: Priyatharshan

04 Aug, 2016 | 02:26 PM
image

தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் உலகில் முன்னிலை வகித்து வருவதுடன் இலங்கையில் இரண்டாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்ற Huawei, இந்த ஆண்டு இலங்கை Super Sevens ரக்பி சுற்றுப்போட்டிக்கு தங்க அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது.

முதன்முறையாக இடம்பெறுகின்ற டயலொக் அக்ஸியாட்டா இலங்கை Super Sevens ரக்பி சுற்றுப்போட்டி 2016 நிகழ்வை இலங்கை ரக்பி உதைபந்து கழகம் ஏற்பாடு செய்துள்ளடன் இதன் ஆரம்ப சுற்று  ஆகஸ்ட் 5 முதல் 6 வரை இடம்பெறவுள்ளதுடன் இரண்டாம் சுற்று இம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான வாங்ஷன்லி கூறுகையில்,

“சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குனர் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் வர்த்தகநாமம் என்ற வகையில் உலகெங்கிலும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அனுசரணையளிப்பதில் Huawei முன்னின்று செயற்பட்டு வருகின்றது. கனவுகளின் வலிமை மீது நம்பிக்கை வைப்பதற்கு நாம் சமூகங்களுக்கு உதவுகின்றோம். எமது பங்காளர்கள் தனித்துவமான எமது நுகர்வோர் மற்றும் விளையாட்டு சமூகம் என அனைவரினதும் கூட்டு வெற்றிக்காக, இலங்கையில் எதிர்கால விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்”.

Huawei Sri Lanka - Device பிரிவின் உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில்,

“புத்தாக்கமிக்க ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் எம்மை சவாலுக்கு உட்படுத்தி எமது நுகர்வோர் தமது கனவுகளை நனவாக்குவதற்கு உதவி வருகின்றோம். ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில் கனவுகள் படைப்பாக்கத்திறனை ஊக்குவிக்கின்றன என நாம் நம்புகின்றோம். 

நாம் தொழிற்படுகின்ற அனைத்து துறைகளிலும் பெறுமதிமிக்க எமது நுகர்வோர் தமது கனவுகளை நனவாக்க உதவும் வகையில் அவர்களை தொடர்ந்தும் ஊக்குவிப்போம். ரக்பி இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டாக உள்ளதுடன்ரூபவ் இலங்கை Super Sevens ரக்பி சுற்றுப்போட்டி போன்ற முன்னணி விளையாட்டு நிகழ்வு ஒன்றுடன் நாம் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளமை உள்நாட்டு விளையாட்டு துறையை மேலும் வலுப்படுத்த உதவும்”.

எட்டு கழக அணிகள் இதில் பங்குபற்றவுள்ளதுடன் உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு, உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஃபிஜி, சாமோ, டொங்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பிரலமான ரக்பி வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்து இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை இந்த ஆண்டு போட்டியின் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 ஒவ்வொரு அணியிலும் மூன்று வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கழக சுற்றுப்போட்டியுடன் இணைந்ததாக பாடசாலைகள் மட்டத்தில் இடம்பெறும் சுற்றுப்போட்டியில் எட்டு பாடசாலை அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58