இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகள் மற்றும் இஸ்ரேலில் ஏழு சிறுபான்மையினர் உட்பட குறைந்தது 27 பாலஸ்தீனியர்களை கொலை செய்துள்ளதாக மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் B’Tselem குழு திங்களன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் இக் காலக் கட்டத்தில் கட்டுமான அனுமதி இல்லாதது என்ற போலிக்காரணத்தில் 729 பாலஸ்தீனிய கட்டிடங்களை இஸ்ரேல் இடித்தும் உள்ளது.

இஸ்ரேல் தனது கொள்கைகளால் 273 வீடுகள் இடிக்கப்பட்ட பின்னர் 519 சிறுபான்மையினர் உட்பட 1,006 பாலஸ்தீனியர்களை இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

மேலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குறைந்தது 2,785 பாலஸ்தீனியர்களை தடுத்து வைத்திருப்பதாகவும் B’Tselem தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேறிகள் நடத்திய 248 தாக்குதல்களை ஆவணப்படுத்தியதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் பலஸ்தீன வீடுகளுக்கு உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் கற்களை எறிவது முதல் விவசாயிகள் அல்லது அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற சம்பங்கள் பதிவாகியுள்ளன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் பாலஸ்தீனிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் கடந்த ஆண்டு குறைந்தது 3,000 தடவைகள் சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளதுடன், 2,480 க்கும் குறைவான வீடுகளை தாக்கியும் உள்ளனர்.