உலக அளவில் 2020 ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது வட்ஸ்அப்பில் ஒரே நாளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஷேபள் படி, வட்ஸ்அப் அழைப்பு கடந்த ஆண்டு இதே நாளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

உலகெங்கிலும் உள்ள மக்கள் புத்தாண்டை ஒன்றாகக் கொண்டாட அதன் பயன்பாடுகளை தொற்றுநோய்க் கட்டுப்பாடுகள் காரணமாக இருந்தாலும் கூட ஒன்றாகப் பயன்படுத்தினர்.

"பேஸ்புக்கில், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் வீடியோ கோல் அழைப்புகளில் பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம், நேற்றிரவு விதிவிலக்கல்ல.

ஆண்டு இறுதி கொண்டாட்டம் என்பது எங்கள் சேவைகளுக்கு வரலாற்று ரீதியாக பரப்பரப்பான இரவு, ஆனால் இந்த ஆண்டு புதிய சாதனைகளை படைத்தது" என குறிப்பிட்டுள்ளது.

2020 ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் அமெரிக்காவில் மெசஞ்சர் குழு வீடியோ அழைப்புகளுக்கு (3 பேர்) மிகப் பெரிய நாளாக இருந்தது, சராசரி நாளோடு ஒப்பிடும்போது  கிட்டத்தட்ட இரண்டு மடங்கு குழு வீடியோ அழைப்புகள் அதெிகரித்துள்ளது.

மறுபுறம், புத்தாண்டு தினத்தன்று உலகளவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் 55 மில்லியனுக்கும் அதிகமான நேரலை ஒளிபரப்புகள் இருந்தன.

"இந்த ஆண்டு, 2020 ஆண்டு இறுதி கொண்டாட்டத்தில் மிகவும் வித்தியாசமாக இருந்தது, மேலும் பேஸ்புக்கின் பயன்பாடுகளில் பொறியியல் குழுக்கள் இருந்தன, எந்தவொரு பிரச்சினையையும் சரிசெய்ய தயாராக இருந்தன, எனவே 2021 ஆம் ஆண்டில் உலகம் ஒலிக்கக்கூடும்" என பேஸ்புக்கின் தொழில்நுட்ப அதிகாரி கெய்ட்லின் பான்போர்ட் தெரிவித்துள்ளார்.