ஜப்பானின் முன்னணி சுமோ மல்யுத்த வீரருக்கு கொரோனா

Published By: Vishnu

05 Jan, 2021 | 10:37 AM
image

முதலிடத்தில் உள்ள ஜப்பானின் சுமோ மல்யுத்த வீரர் ஹகுஹோ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பான் சுமோ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மங்கோலியாவில் பிறந்த 35 வயதான சுமோ கிராண்ட் சாம்பியனான ஹகுஹோ தனது வாசனை உணர்வை இழந்த பின்னர் கொவிட் -19 பரிசோதனையை நேற்யை தினம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் கிராண்ட் சுமோ போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஹகுஹோ வுக்கு கை நழுவிப் போயுள்ளது.

ஜப்பானில் தற்போது 249,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,472 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

அதனால் டொக்கியோவிற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பான அறிவிப்பினை ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா வியாழக்கிழமை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் இந்த கோடையில் தாமதமான 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கை நடத்த முடியுமா என்பதில் புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26