உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்  தேசிய அளவிலான ஊரடங்கை திங்கட்கிழமை பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய போரிஸ் ஜோன்சன்,

தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்தார். ஆறு வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனத் தெரிகிறது. புதன் கிழமை முதல் பாடசாலைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்கொட்லாந்தும் இதேபோன்ற  ஊரடங்கை அறிவித்துள்ளது. 

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது.  இதையடுத்து,  பிரித்தானியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார். 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 75,547 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2,721,622  பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.