2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறு ஆட்டத்தில் கனடா ரஷ்யாவை வீழ்த்தியுள்ளது.

கனடாவின் எட்மண்டனில் திங்களன்று நடந்த இந்த அரையிறுத் ஆட்டத்தில் 5-0 கனடா (3-0, 1-0, 1-0) என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியுள்ளது.

அலெக்ஸ் நியூஹோக் (1 ஆவது நிமிடம்), கானர் மெக்மிகேல் (11 ஆவது நிமிடம்), கோல் பெர்பெட்டி (16 ஆவது நிமிடம்), பிராடன் ஷ்னைடர் (25 ஆவது நிமிடம்), டிலான் கோசன்ஸ் (59 ஆவது நிமிடம்) ஆகியோர் கனடா அணி சார்பில் கோல்களை அடித்தனர்.

தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது அமெரிக்கா மற்றும் பின்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்துக்கான ஆட்டமும் இன்று நடைபெறும்.

கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமான 2021 உலக ஜூனியர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.