வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ்  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கர் தனது இலங்கைக்கான விஜயத்தில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயம் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகரின் முதல் வருகையை குறிக்கும் அதே வேளையில், இது புத்தாண்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கான முதல் வெளிநாட்டு பயணமாகவும் திகழ்கிறது. 

உயர் மட்ட பரிமாற்றங்கள் மூலம், இரு தரப்பினரும் ஒத்துழைப்பின் பல துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.

இரு நாடுகளிலும் நிலவும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.