பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோ பாடிய  பாடல் ஒன்றை அவரது அனுமதியின்றி பாடி, நிதி சேகரித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பாடகர் எம்.ஜி. தனுஷ்க இன்று (04) நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

எம்.ஜி. தனுஷ்க, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்த நிலையில் இவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

எம்.ஜி. தனுஷ்க நீதிமன்றில் ஆஜராகியுள்ளதால் அவருக்கு விடுத்திருந்த பிடியாணையை  நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று மீளப்பெற்றுக்கொண்டுள்ளார். 

பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோ பாடிய  பாடல் ஒன்றை அவரது அனுமதியின்றி பாடி, நிதி சேகரித்தார் என பாடகர் எம்.எஸ் பெர்ணான்டோவின் மகன் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.