இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான மொயின் அலிக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையுடன்  இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது