வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று சாந்தசோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

நேற்று (03) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

வவுனியா சாந்தசோலையில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தும் பெண் நேற்றையதினம் இரவு கடையில் தனிமையில் இருந்துள்ளார். 

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் அவரது வியாபார நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதுபோல பாசாங்கு செய்துவிட்டு அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நிலை குலைந்த பெண் அயலவர்களிற்கு தெரிவித்ததுடன்  சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த முதலாம் திகதியும் வவனியா நகர்பகுதியில் தங்கச்சங்கிலியை அறுத்துச்சென்ற இருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்தி்ருந்தனர்