நட்பின் சிறப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இத்தினத்தை முன்னிட்டு, வைபர் நிறுவனம் ‘உயிர் தோழர்கள்’ மற்றும் “Dumpy the Elephant 2” எனும் இரண்டு கருப்பொருளில் உள்நாட்டுக்கேற்ற இரண்டு ஸ்டிக்கர் பொதிகளை ஸ்டிக்கர் சந்தையில் இணைத்துக் கொண்டுள்ளது.

உலகின் முன்னணி தகவல் பரிமாறும் செயலிகளில் ஒன்றும் உலகளவில் 754 மில்லியன் பயன்படுத்துநர்கள் மற்றும் இலங்கையில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட 5 மில்லியன் பயனர்களையும் கொண்டுள்ள வைபர் நிறுவனம் அண்மையில் உள்நாட்டு பயனாளர்களின் உணர்வுகளுக்கேற்ற வகையில் பிரத்தியேகமான ஸ்டிக்கர் பொதிகளை அறிமுகம் செய்திருந்தது. 

ஸ்டிக்கர்கள் தொடர்பாடலை மேலும் சுவாரசியமாகவும் உயிரோட்டமானதாகவும் மாற்றமடையச் செய்கின்றன. மேலும் பயன்படுத்துநர்கள் தங்களது தொடர்பாடலில் தாமே மாற்றங்களை மேற்கொள்ளவும் இது உதவுகிறது. சுமார் மாதமொன்றுக்கு 80 மில்லியன் ஸ்டிக்கர்கள் இலங்கையிலுள்ள வைபர் பயன்படுத்துநர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

“இலங்கையில் ஸ்டிக்கர் பயன்பாடு பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளதுடன்ரூபவ் எமது உள்நாட்டு பிரத்தியேக ஸ்டிக்கர்கள் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது. இலங்கையிலுள்ள எமது பயனர்களுக்கு ஏற்ற வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் தெரிவுகளை அறிமுகம் செய்து நண்பர்கள் தினத்தை கொண்டாட எதிர்பார்த்துள்ளோம்” என வைபரின் தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரி அனுபவ் நாயர் தெரிவித்தார்.