இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதிய உணவு இடைவேளையின் போது 109 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

ஓட்டம் எதுவும் பெராத நிலையில் முதல் விக்கட்டை இழந்த இலங்கை அணி இரண்டாவது விக்கட்டை 9 ஒட்டங்களுக்கு இழந்து தடுமாறியது.

இந்நிலையில் 3 ஆவது விக்கட்டுக்காக இணைந்த குசால் மெண்டிஸ் மற்றும் குசால் பெரேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் குசல் மெண்டிஸ் தனது இரண்டாவது டெஸ்ட் அசை்சதத்துடன் 52 ஓட்டங்களையும், குசல் பெரேரா 47 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.