தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று எவரும் அடக்க முடியாத வெற்றி காளையாக வலம் வரும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் செந்தில் தொண்டமானின் காளையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி கெளரவித்தார்.

திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோரை, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநிலத் தலைவர் ஒண்டிராஜ், தேசிய அமைப்பாளர் ராஜா மற்றும் பிற நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,செயற்குழு உறுப்பினர்கள்  மற்றும்  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் பல்வேறு உறுப்பினர்கள் சிறப்பாக வரவேற்றனர்.

மேலும் இந்த கொவிட்-19 தொற்று சூழ்நிலையில் புதிய சுகாதார விதிமுறைகளுடன் பொங்கல் திருவிழாவிற்காக  ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளித்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றிகளை  தெரிவித்தனர். 

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் செந்தில் தொண்டமானின் சிறந்த இரண்டு காளைகள் காட்சிக்கு நிறுத்தப்பட்டன.

2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில்  யாராலும் அடக்க முடியாத சிறந்த காளைக்கு கார் பரிசாக வரலாற்றில் முதல்முறையாக வழங்கப்படும் என்று  தமிழக அரசு சார்பில்  அறிவிக்கப்பட்டது. 

அந்த பரிசை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின்  தலைவர் செந்தில் தொண்டமானின் காளை அந்த வருடம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தட்டிச் சென்றது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர்  செந்தில் தொண்டமானின் காளை அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் செந்தில் தொண்டமானின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, கார் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர் செந்தில் தொண்டமானின் காளை தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று யாரும் அடக்க முடியாத வெற்றி காளையாக வலம் வந்துள்ளது.

இந்த காளைக்கென தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தனை சிறப்பு மிக்க   காளைகளின் கயிறுகளை பெற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காளைகளை கெளரவித்தார்.