உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இன்று (04) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை சென். ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சை மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென எற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உயிரிழப்பினால் பரீட்சை ஆரம்பிப்பதில் எவ்வித இடையூறுகளும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பரீட்சை நிலையத்திற்கு மற்றுமொரு மேற்பார்வையாளர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது